Sunday, December 7, 2008

சண்டே இன் அங்கேரி

நான் வேலை விசயாமாகஹைரோப்பவில் இருக்கும் அங்கேரி நாட்டிற்கு போக நேர்ந்தது. முன்று வாரம் நான் அங்கு இருக்க வேண்டும். நான் டிசம்பர் மாதம் சென்றதால், பனிக்கால குளிரில் வாழும் அனுபவம் கிடைத்தது.

ஏறக்குறைய மைனஸ் முன்று டிகிரி இருக்கும். அங்குள்ள மக்கள் எப்படித்தான் இந்த குளிரில் வாழ்கிறார்களோ என்று அடிக்கடி என் மனதில் கேட்டுகொண்டேன்.

அன்று ஞாயிட்று கிழமையாதலால் நான் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் காலை பூஸையில் கலந்து கொள்ள, தேவலயைத்தை நோக்கி, கலை குளிரில் நடந்து கொண்டிருதேன். வழியில் சில வழிபோக்கர்களை காண நேர்ந்தது

அவர்கள் முகத்தில் சோகம் தெரிந்தது. அந்த நாட்டின் எகொநோமி நிலைமை அந்த நாட்டின் மக்களை மிகவும் பாதித்திருந்தது. ஏறக்குறைய ஐம்பது சதவீதம் வருமான வரி மக்களிடம் இருந்து வசூலிக்க பட்டது. இது மக்களை மிகவும் பாதித்தது.

ஒரு வழியாகா தேவாலையத்தை அடைந்தேன்.

ஆலையத்தில் மக்கள் நிரம்பி இருந்தனர். தேவாலையம் மிகவும் பெரியதை அமைக்க பட்டிரிந்தது . அதன் அழகில் ஒரு கணம் நான் பிரமித்து போனேன்.

நம் நாட்டில் உள்ள மக்கள் பூசையில் கலந்து கொள்ளும் விதமும் அங்குள்ள மக்கள் கலந்து கொள்ளும் விதத்திலும் பெரிய வித்தியாசத்தை பார்க்க முடிந்தது.

பாதிரியார் புசை நடத்தும் பொழுதிலும் சரி இறைவனின் துதி படும் பொழுதும் சரி தேவாலயத்தில் "பின் ட்ரோப் சைலன்ஸ் " உணர முடிந்தது.

நம் நாட்டிலோ ஒரே இரைச்சல் .......மக்கள் போடும் சத்தம் அப்படி!

பூசை முடிந்து நான் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி நடந்த பொழுது, என்றாவது நம் நாட்டில் "இரைச்சல் அட்ற நிலையில் பூசை காண முடியுமா என்று" என் உள் மனம் என்னை வினவிய பொழுது ............என் மனம் வலித்தது.

Thursday, November 6, 2008

இதுதான் நீ

நான் சிறு குழந்தையாய் இருந்தபோது
என்னைபோல் உன்னையும் கடவுள் என்றே கருதினேன்
விளையாட்டு வயதில் உன்னை நண்பனாக நேசித்தேன்
பருவ வயதில் கொஞ்சம் புலப்பட ஆரம்பித்தது
நட்பை நீ நாசமாக்கினை என்று
அனுபவம் போதிக்கும் வயதில்
அன்புப் பரிமாற்றத்தின்
அமுதம் அறியாதவன் என உணர்ந்தேன்
காதோரம் நரை விழுந்த காலத்தில்
நீ ஒற்றுமையை விலை பேசுபவன் என்று
மனம் நொந்தேன்
கொஞ்சம் முதிர்ந்த வயதில்
பொறாமை உள்ளடக்கி
முதுகில் குத்துபவன்
எனப் புரிந்து கொண்டேன்
ஏத்தனை வயதானாலும்
மற்றவனக்கு கைகட்டி
கூலி செய்வபவன் என மூர்க்கமானேன்
இப்போது நான் அந்திமத்து விளிம்பில்
உன்னை உன்னையாக்க
முயற்சியில் என்னால் எதுவும் முடியாது போலும் !!!

Thursday, October 30, 2008

வெட்ட வெளிச்சம்

அருவி ...........

வாழ்க்கை என்றுமே சிராக இருப்பதில்லை

என்பதை உணர்த்தியது

இரவு பகல் ..........

வாழ்வு இன்பமும் துன்பமும் நிறைந்ததை

படம் போட்டு காட்டியது

வாகன நெரிசல் ...........

மனிதன் ஒரு பொறுமை அற்ற பிராணி என்பதை

சுட்டிக் காட்டியது

பசிக் கொடுமை ..........

மனித குலத்தின் சுய நலத்தை

வெளிப்படுத்தியது

காமக் களியாட்டம் ........

நமக்குள் மிருகம் மறைந்து இருப்பதை

மறைமுகமாக வெளியே கொணர்ந்தது

குழந்தை .........

நம்முள் இருந்த தெய்வீகத்தை கொன்று விட்டதை

நினைவுறுத்தி ஏளனம் செய்கிறது!

Wednesday, October 29, 2008

ஒரு கவிதை

நீ என்ன உறைப்பனியா ?
நான் சூரியனாக வந்த போது
............நீ மறைந்து போனாய்!

மீண்டும் வருவேன் ......திங்களாக!


கறுப்பு மனிதனின் கதை

வெள்ளையன் ஒருவன் ஒரு கறுப்பு இன குழந்தையை வளர்த்தானாம். அந்த குழந்தையும் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளர்ந்து பெரியவனாகியது.
வெள்ளையனுக்கு ஒரே ஒரு குறைதானாம் . அவன் இட்ட ஆணைகளை கறுப்பினத்தவன் செய்ய வேண்டுமானால் வெள்ளையன் கருப்பனை ஒரு அடியாவது அடிக்க வேண்டுமாம். இல்லையேல் அவன் அந்த வேலையை செய்ய மாட்டானாம் !
இப்படியே நாட்கள் மாதங்களாயின .....மாதங்கள் வருடங்களாயின !
ஒரு நாள் , வழக்கம் போல் வெள்ளையன் அவனை அடிக்க நேர்ந்தது .........என்ன ஆச்சரியம் கறுப்பன் திடிரென்று வெள்ளையனை எதிர்த்து " ஏன் என்னை அடிக்கிறாய் என்று கேட்டானாம்.
வெள்ளையனின் முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடியது !
"மகனே நீ "ஏன் " என்ற கேள்வி கேட்டவுடனேயே நீ முழு மனிதனாகிவிட்டைமேலும் இனி உன் வாழ்வை நீயே நிர்மாணிக்க கற்று கொள்வாய்" என்று சொல்லி அவனை கட்டி அனைத்து கொண்டார்.

இலை மறைக்கை

இன்று நான் என் நண்பர் ஒருவர் வீட்டிற்கு டின்னர் உண்ண சென்றேன் .அங்கு நண்பரின் தந்தையை காண நேர்ந்தது . எப்படிப்பட்ட மனிதர் அவர் . நான் பிரமிப்பு கொண்டேன் .
அவரிடம் நான் கற்று கொள்ள வேண்டியது நிறைய உள்ளது. அவரின் தமிழ் ஆற்றல் என்னை மிகவும் கவர்ந்தது.
நிறைய பேச வேண்டும் என்று எனக்கு ஆசை எழுந்தது . ஆயினும் , நேரம் போதத்தால் என்னால் நிறைய பேச முடியவில்லை.
மீண்டும் அவரை பார்க்க என் மனம் துடிக்கின்றது ........

Tuesday, October 28, 2008

Life is wonderful....don't you think so?

Friends,

I just launched my blog with the objective of sharing my thoughts and experiences. I like to read a lot ..perhaps I can always share some interesting stuffs with you....
Today I read some articles from my favourite blogger srama. The articles was about a new movie which was directed by war victim in Poland. After I read the article, I paused for a moment and realized that How Gifted are we on this earth compared to those war casualities.
The story was touching....I tried to put my self in the skecth but....I couldn't !

Talk to you soon...