Sunday, March 22, 2009

ஆட்டு மந்தைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு………..

மலையடிவாரத்தில்
ஆட்டு மந்தைகளைப்போல்
உன்னை வளைத்துப் பிடித்து
ஜல அபிஷேகம் செய்து
பின்னர் காவல்நாய்களிடம்
ஒப்படைத்தன
செம்மறி ஆடைத் தரித்த
நரிகள்

சீறி எழுந்தன
ஆட்டு மந்தைகள்
போகமாட்டோம்!… போகமாட்டோம்!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று
உறுதி மொழி கொண்டன

ஒரு வருடத்திற்கு பின்பு…………

பகல் கொள்ளை நரிகளின்
உறைவிடமான
அந்த “மலையடிவாரத்தில்
மீண்டும் சங்கமத்தின
ஆட்டு மந்தைகள்

செய்தியை படித்தேன்
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்
எனக்கு தரிசனம்!!!

அடுத்த வருடமாவது
ஆட்டு மந்தைகளுக்கு
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.

கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி

கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி

Saturday, March 21, 2009

மனிதனின் அபார கண்டுப்பிடிப்பு

உங்களுக்கு தெரியுமா என்னவென்று? சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.
அ. மனிதன் ஒரு சிந்திக்கும் பிராணி என்பது
அவனுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதை அவன் தெரிந்துகொண்டது. மேலும் தன் சிந்திக்கும் திறனால் அவன் ஒரு பணியை நிர்மாணித்து பின்னர் அதை செயல்படுத்துவதும்தான் மனிதனின் முதல்கண்டுபிடிப்பு.
மிருகங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை.அதனால்தான் இன்றுவரை மிருகங்களின் ராஜ்யத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

ஆ. மனிதன் தன் எண்னத்திற்க ஏற்றபடி செதுக்கபடுகிறான் தெரிந்து கொண்டது மற்றொரு அபார கண்டுபிடுப்பு
மனிதனின் இற்ந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் அவனுடைய எண்ணங்களை பொருத்தே அமைகிறது. பொதுவாக, இதைதான் தன்முனைப்பு பட்டறையில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது.

ஆக, நாம் இந்த இரு கண்டுபிடிப்பின் மூலம் மனிதன் ...மனிதனாக வாழக் ஏன் இன்னும் முடியவில்லை என்பது இன்னமும் ஒரு புதிராக இருப்பது என்னை வியக்க வைக்கிறது!

Friday, February 27, 2009

ஏன் இந்திய அரசாங்கம் ஈழம் பிரச்சனையில் மௌனம்! என் மனக் குமுரலை கீழே உள்ள கவிதையின் மூழம் கொட்டி தீர்க்கிறேன்!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

ரத்தக் காட்டேரி எம்மக்களின்
குருதியை ருசி பார்க்க கிளம்பிட்டதே
குழந்தைகளின் அழுகுரல்
என் தூக்கத்தை பறித்து பல நாட்கள் ஆயின

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

அதோ ஒரு தலை ராவணண்
அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்துக்கொண்டு
என் சகோதரர்களை கொன்று குவிக்கிறான்
இந்த கொடுமையைக் கேட்க நாதியில்லாமல்
போய் விட்டது என் சமுகம்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

இட்லர் மறுபிறவி எடுத்து விட்டான்
என்று நீ கூறியபோது நான் நம்பவில்லை
இதோ அந்த கொடும்பாவியின்
இன அழிப்பு வேட்டை நன்றே நடக்கின்றது
தட்டிக்கேட்க என் முத்தமிழ் நாயகன் வருவான்
என்று எதிர்பார்த்த எனக்கு…..முகத்தில் கரி
மருத்துவமனையில் தஞ்சம் கொண்டானாம்
என் முத்தமிழ் நாயகன்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

எம்மதமும் சம்மதம் என்ற
என் மக்களுக்கு போர்க்கொடி
தூக்கி புறப்பட்ட அமைதி புறாக்கள்
“கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த குள்ளநரிகள்
“நிர்வான” சுரபியை கூப்பிட்டேன்
அவன் தூக்குப் போட்டுக்கொண்டனாம்….செய்தி வந்தது!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

கண்ணகி வேஷத்தில் மறைந்திருக்கும்
“பிஷா” கோபுரக் நாடகக்காரி
தன் வஞ்சத்தை தீர்க்க
இன்று என் மக்களின் இன அழிப்பு வேட்டைக்கு உடந்தை
இவள் ராஜ அசுரனின் வப்பாட்டியோ?
என் தமிழ் மக்களே
பொங்கி எழுங்கள்
இவர்கள் சந்ததியை ஒழித்திடுவோம்
அப்பொழுதாவது என் மக்களின்
ஆத்துமா சாந்தி அடையட்டும்
அரசியல் நரிகளுக்கும் புத்தி வரட்டும்

பிரான்சிஸ் சைமன், பினாங்கு,மலேசியா.

Monday, February 16, 2009

புதைக்குழி நாயகன்

பள்ளி வயதில்
புதைக்குழிகளுக்கும்
பிணங்களை உண்ணும்
உடும்புகளுக்கும் ஒரு தொடர்பு உண்டு
என்பதை அறிந்துள்ளேன்

இன்று
உனக்கும் புதைக்குழிக்கும்
ஜென்ம தொடர்பு உள்ளதை
என் மக்களின் மரண ஓலையின்
மூலம் தெரிந்துக் கொண்டேன்

ஏய்! ராஜ பக்சே
சரித்திரத்தில் இன்று முதல்
நீ ஒருவன் மட்டும்
"புதைக்குழிகளின் நாயகன்" என்று
சித்தரிக்கப் படுவாய்
இது நிச்ச்யம்!!!

Sunday, February 8, 2009

சிரிப்பு வருது..சிரிப்பு வருது..சிரிக்க தெரிந்த சிரிப்பு வருது..

அன்பார்ந்த தமிழ் மக்களே!

சற்று முன், வழக்கம் போல் "மலேசியா கினி" உலா வந்தேன். ஒரே ஒரு தகவல் மட்டும் என் கவனத்தை ஈர்த்தது......தலைப்பை படிததவுடனே சிரித்து விட்டேன். என்ன செய்தி அது என்று கேட்கிறிற்களா...

"Zambry pledge RM100,000 for temple"

யார் அந்த Zanbry? நம்ம பேராக் புதிய முதல்வர்தான்!

நம்ம முதல்வர் சரி UMNO புத்திரர்களும் சரி நம்ம சமுதாயத்த எப்படி அடித்த எங்க சாய்வாங்கினு நல்லாவே தெரிந்து வச்சிரிக்காங்க......

கோயில்லுக்கு பணம் தந்தாவே நம்ம மக்க சாய்ந்திடுவாங்கனு நான் அனுபவத்தில் புரிந்துகொண்டது.....ஆன இப்ப எப்படி என்று தெரியல.



நண்பர்களே நாம் ஏமாறக்கூடாது.......கோயிலுக்கு பணத்த அழித்தது போதும் இனிமேலாவது கல்விக்கு முதலிடம் கொடுக்க கத்துக்கவும்!

அது சரி, நம்மல எத்தனி பேர் இந்த வருட பத்து கேவ்ஸ் தைப்பூசத்த புறக்கனித்தோம்!!! வங்க கொஞ்ச சிந்திப்போம்!

Wednesday, February 4, 2009

விரைந்து வா!

விரைந்து வா!

அன்று….நள்ளிரவு
உலகின் கவனம் முழுவதும்
உன் மேல்…2008 –ன் மாமனிதன் நீதானே
இருக்காத பின்னே!

என்னக் கூறப்போகிறாய்
என்னச் செய்யப் போகிறாய்,
உன் வாக்குறுதிதான் என்ன என்று
இவ்வுலகமே எதிர்பார்த்துக்கொண்டிருந்தது

அன்று
“பிராவுன்” கொடுமையில் பாடுப்பட்ட யூதர்களை
விடுவிக்க வந்த “மோயீசனை” போல்

இன்று
இராவணணின் “இன அழிப்பு” வேட்டையை
தட்டிக் கேட்க வந்தவன் “நீ” என்று

…………என் ஆழ்மனம் பறைச்சாற்றிக்கொண்டிருந்தது

உன் உதட்டினிலிருந்து வெடித்த ஒவ்வொரு வார்த்தையும்
அரசியல் நரிகளின் இரத்த வெறிக்கு பலியாகிக்கொண்டிருக்கும்
எம் மக்களுக்கு புத்துயிர் கிடைக்க வித்திட்டது
ஆனந்தத்தில் இலயத்துப்போயிருந்தேன்!!!

இரு விரல்கள் கொண்டு
கண்ணத்தை லேசாக கிள்ளி பார்க்கிறேன்
“வலி” நான் நிஜ வாழ்க்கையில்தான் இருக்கிறேன்
உறுதிப்படுத்தியது

உன் வார்த்தைகள் நிஜமானவை
உன் வாக்குறுதி உறுதியானவை
என் எண்ணங்கள் ஞாயமானவை
என்று இவ்வுலகிற்கு உறுதிப்படுத்த
நீ விரைந்து வருவாய் என
என் தமிழினம் காத்துக்கொண்டிருக்கிறது


தூக்கத்தை பறிகொடுத்து
உன் பேச்சுரையில் மயங்கிக் கிடந்த
கோடிக்கனக்கான மனித மந்தையில்
நானும் ஒருவன் என்று
கூறிப் பெருமைப்படுவதா இல்லை வெட்கப்படுவதா என்று
எனக்கு தெரியவில்லை…..உன் வருகை பதில் சொல்லட்டும்
இப்பொழுது நான் தூங்க விரும்புகிறேன்!!!

பிரான்சிஸ் சைமன்
பினாங்கு, மலேசியா.

Friday, January 30, 2009

என் மகனுக்கு

மகனே!
நான்........
உன்னை மகனாய் பார்த்ததில்லை
மாபெரும் தலைவனாகத்தான்
தினமும் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

Wednesday, January 28, 2009

நரிக் கூட்டம்

நரிக் கூட்டம்

சிந்தித்துப் பார்த்தேன்
குபிரென்று வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை
அன்று.....
தமிழன் என்ற பினைப்பில்
எங்கள் கூட்டணி உதயமானது
அரசியல் என்ற கலத்தில்
உங்களை முத்திரை பதிக்கவைத்தோம்
இன்று.....
பாலஸத்தினத்தில் நடக்கும் போர்க் கொடுமை
உங்களுக்கு தெரிந்த அளவு
இங்குள்ள தமிழனின்
அவநிலையை தெரிந்துக் கொள்ள முடியவில்லை
பார்க்க முடியாத குருடர்களாய்
நீங்கள் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது!
பாலஸத்தினத்திற்கு கொடி தூக்கிய நீங்கள்
இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு
ஏன் கொடி தூக்கவில்லை என்று
நான் கேட்க மாட்டேன்
கேட்டாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை

-பிரான்சிஸ சைமன்,
பினாங்கு, மலேசியா.

Tuesday, January 13, 2009

குட்டி கவிதைகள்

ஏமாற்றம்
எருதுகள் போராட்டம்
வென்றது வெள்ளை நரிகள்...

மரண விளிம்பு
அறிவியல் கணிதம்
ஆங்கிலத்தில் போதனை
"கட்ட பொம்மனுக்கு" மீண்டும் தூக்கு கயிறு !

புதுமைத் தலைவர்
" செவ் தெமில் " தலைவர் முழக்கம்
நின்றது தமிழ் இனத்தின் இதய துடிப்பு

அறியாமை
பிள்ளைகளின் கல்வி செலவு
துண்டிப்பு
அஸ்ட்ரோ விற்கு மீண்டும் இணைப்பு!



இலங்கையில் தமிழன் அவதி ....இங்கோ அரசியல் நரிகளின் ஊலை கண்ணீர் பலஸ்தீனத்தின் நிலையை குறித்து...

என் அருமை நண்பர்களே ...உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்.

சில நாட்களாக நம் உள்ளூர் பத்திரிகைகளில் பலஸ்தீனத்தில் நடக்கும் போரை பற்றி நிறைய எழுத படுவதை கவனித்தேன்.
என்ன கொடுமை சார் !!!!
பக்கத்தில் இருக்கும் இலைங்கையில் தமிழனை கொன்று குவிக்கிறார்கள். இது நம் நாட்டு தலைவர்களுக்கு தெரியவில்லை போலும். ஒரு கணம் நம் நாட்டு தலைவர்களுக்கு " தொலை பார்வை " போலும்!
என்ன அதிசயம் என்றால் மக்கள் சக்தியினால் உருவாக பட்ட நம் இனத்து தலைவர்களும் சேர்ந்து கோடி தூக்கியது நம்மை oru கணம் சிரிக்க வைக்கிறது !!!
அதே சமயத்தில் நமை சிந்திக்கவும் செய்கிறது!