Friday, January 30, 2009

என் மகனுக்கு

மகனே!
நான்........
உன்னை மகனாய் பார்த்ததில்லை
மாபெரும் தலைவனாகத்தான்
தினமும் உன்னை பார்த்துக்கொண்டிருக்கிறேன்!

Wednesday, January 28, 2009

நரிக் கூட்டம்

நரிக் கூட்டம்

சிந்தித்துப் பார்த்தேன்
குபிரென்று வந்த சிரிப்பை அடக்கமுடியவில்லை
அன்று.....
தமிழன் என்ற பினைப்பில்
எங்கள் கூட்டணி உதயமானது
அரசியல் என்ற கலத்தில்
உங்களை முத்திரை பதிக்கவைத்தோம்
இன்று.....
பாலஸத்தினத்தில் நடக்கும் போர்க் கொடுமை
உங்களுக்கு தெரிந்த அளவு
இங்குள்ள தமிழனின்
அவநிலையை தெரிந்துக் கொள்ள முடியவில்லை
பார்க்க முடியாத குருடர்களாய்
நீங்கள் இருப்பது எனக்கு வேடிக்கையாக இருக்கிறது!
பாலஸத்தினத்திற்கு கொடி தூக்கிய நீங்கள்
இலங்கையில் நடக்கும் கொடுமைகளுக்கு
ஏன் கொடி தூக்கவில்லை என்று
நான் கேட்க மாட்டேன்
கேட்டாலும் ஒன்றும் நடக்கபோவதில்லை

-பிரான்சிஸ சைமன்,
பினாங்கு, மலேசியா.

Tuesday, January 13, 2009

குட்டி கவிதைகள்

ஏமாற்றம்
எருதுகள் போராட்டம்
வென்றது வெள்ளை நரிகள்...

மரண விளிம்பு
அறிவியல் கணிதம்
ஆங்கிலத்தில் போதனை
"கட்ட பொம்மனுக்கு" மீண்டும் தூக்கு கயிறு !

புதுமைத் தலைவர்
" செவ் தெமில் " தலைவர் முழக்கம்
நின்றது தமிழ் இனத்தின் இதய துடிப்பு

அறியாமை
பிள்ளைகளின் கல்வி செலவு
துண்டிப்பு
அஸ்ட்ரோ விற்கு மீண்டும் இணைப்பு!



இலங்கையில் தமிழன் அவதி ....இங்கோ அரசியல் நரிகளின் ஊலை கண்ணீர் பலஸ்தீனத்தின் நிலையை குறித்து...

என் அருமை நண்பர்களே ...உங்கள் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்துக்கள்.

சில நாட்களாக நம் உள்ளூர் பத்திரிகைகளில் பலஸ்தீனத்தில் நடக்கும் போரை பற்றி நிறைய எழுத படுவதை கவனித்தேன்.
என்ன கொடுமை சார் !!!!
பக்கத்தில் இருக்கும் இலைங்கையில் தமிழனை கொன்று குவிக்கிறார்கள். இது நம் நாட்டு தலைவர்களுக்கு தெரியவில்லை போலும். ஒரு கணம் நம் நாட்டு தலைவர்களுக்கு " தொலை பார்வை " போலும்!
என்ன அதிசயம் என்றால் மக்கள் சக்தியினால் உருவாக பட்ட நம் இனத்து தலைவர்களும் சேர்ந்து கோடி தூக்கியது நம்மை oru கணம் சிரிக்க வைக்கிறது !!!
அதே சமயத்தில் நமை சிந்திக்கவும் செய்கிறது!