Sunday, December 7, 2008

சண்டே இன் அங்கேரி

நான் வேலை விசயாமாகஹைரோப்பவில் இருக்கும் அங்கேரி நாட்டிற்கு போக நேர்ந்தது. முன்று வாரம் நான் அங்கு இருக்க வேண்டும். நான் டிசம்பர் மாதம் சென்றதால், பனிக்கால குளிரில் வாழும் அனுபவம் கிடைத்தது.

ஏறக்குறைய மைனஸ் முன்று டிகிரி இருக்கும். அங்குள்ள மக்கள் எப்படித்தான் இந்த குளிரில் வாழ்கிறார்களோ என்று அடிக்கடி என் மனதில் கேட்டுகொண்டேன்.

அன்று ஞாயிட்று கிழமையாதலால் நான் அங்குள்ள தேவாலயத்தில் நடைபெறும் காலை பூஸையில் கலந்து கொள்ள, தேவலயைத்தை நோக்கி, கலை குளிரில் நடந்து கொண்டிருதேன். வழியில் சில வழிபோக்கர்களை காண நேர்ந்தது

அவர்கள் முகத்தில் சோகம் தெரிந்தது. அந்த நாட்டின் எகொநோமி நிலைமை அந்த நாட்டின் மக்களை மிகவும் பாதித்திருந்தது. ஏறக்குறைய ஐம்பது சதவீதம் வருமான வரி மக்களிடம் இருந்து வசூலிக்க பட்டது. இது மக்களை மிகவும் பாதித்தது.

ஒரு வழியாகா தேவாலையத்தை அடைந்தேன்.

ஆலையத்தில் மக்கள் நிரம்பி இருந்தனர். தேவாலையம் மிகவும் பெரியதை அமைக்க பட்டிரிந்தது . அதன் அழகில் ஒரு கணம் நான் பிரமித்து போனேன்.

நம் நாட்டில் உள்ள மக்கள் பூசையில் கலந்து கொள்ளும் விதமும் அங்குள்ள மக்கள் கலந்து கொள்ளும் விதத்திலும் பெரிய வித்தியாசத்தை பார்க்க முடிந்தது.

பாதிரியார் புசை நடத்தும் பொழுதிலும் சரி இறைவனின் துதி படும் பொழுதும் சரி தேவாலயத்தில் "பின் ட்ரோப் சைலன்ஸ் " உணர முடிந்தது.

நம் நாட்டிலோ ஒரே இரைச்சல் .......மக்கள் போடும் சத்தம் அப்படி!

பூசை முடிந்து நான் தங்கியிருந்த ஹோட்டலை நோக்கி நடந்த பொழுது, என்றாவது நம் நாட்டில் "இரைச்சல் அட்ற நிலையில் பூசை காண முடியுமா என்று" என் உள் மனம் என்னை வினவிய பொழுது ............என் மனம் வலித்தது.