Sunday, March 22, 2009

ஆட்டு மந்தைகள்

ஒரு வருடத்திற்கு முன்பு………..

மலையடிவாரத்தில்
ஆட்டு மந்தைகளைப்போல்
உன்னை வளைத்துப் பிடித்து
ஜல அபிஷேகம் செய்து
பின்னர் காவல்நாய்களிடம்
ஒப்படைத்தன
செம்மறி ஆடைத் தரித்த
நரிகள்

சீறி எழுந்தன
ஆட்டு மந்தைகள்
போகமாட்டோம்!… போகமாட்டோம்!
இனி அந்த “மலையடிவாரத்திற்கு” என்று
உறுதி மொழி கொண்டன

ஒரு வருடத்திற்கு பின்பு…………

பகல் கொள்ளை நரிகளின்
உறைவிடமான
அந்த “மலையடிவாரத்தில்
மீண்டும் சங்கமத்தின
ஆட்டு மந்தைகள்

செய்தியை படித்தேன்
ஒரே நேரத்தில் சிரிப்பும் அழுகையும்
எனக்கு தரிசனம்!!!

அடுத்த வருடமாவது
ஆட்டு மந்தைகளுக்கு
பகுத்தறிவு பிறக்கட்டும் என்று
மலையடிவாரத்தில் குடியிருக்கும் அந்த
“ஞானப்பண்டிதனைக்” கேட்டுக்கொள்கிறேன்.

கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி

கவித்தமிழ்: அண்ணன் வேதமூர்த்தி

Saturday, March 21, 2009

மனிதனின் அபார கண்டுப்பிடிப்பு

உங்களுக்கு தெரியுமா என்னவென்று? சொல்கிறேன் தெரிந்து கொள்ளுங்கள்.
அ. மனிதன் ஒரு சிந்திக்கும் பிராணி என்பது
அவனுக்கு சிந்திக்கும் திறன் இருப்பதை அவன் தெரிந்துகொண்டது. மேலும் தன் சிந்திக்கும் திறனால் அவன் ஒரு பணியை நிர்மாணித்து பின்னர் அதை செயல்படுத்துவதும்தான் மனிதனின் முதல்கண்டுபிடிப்பு.
மிருகங்களுக்கு சிந்திக்கும் திறன் இல்லை.அதனால்தான் இன்றுவரை மிருகங்களின் ராஜ்யத்தில் மாற்றம் ஏதும் இல்லை.

ஆ. மனிதன் தன் எண்னத்திற்க ஏற்றபடி செதுக்கபடுகிறான் தெரிந்து கொண்டது மற்றொரு அபார கண்டுபிடுப்பு
மனிதனின் இற்ந்த காலம்,நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் அவனுடைய எண்ணங்களை பொருத்தே அமைகிறது. பொதுவாக, இதைதான் தன்முனைப்பு பட்டறையில் பெரும்பாலும் விவாதிக்கப்படுகிறது.

ஆக, நாம் இந்த இரு கண்டுபிடிப்பின் மூலம் மனிதன் ...மனிதனாக வாழக் ஏன் இன்னும் முடியவில்லை என்பது இன்னமும் ஒரு புதிராக இருப்பது என்னை வியக்க வைக்கிறது!