Friday, February 27, 2009

ஏன் இந்திய அரசாங்கம் ஈழம் பிரச்சனையில் மௌனம்! என் மனக் குமுரலை கீழே உள்ள கவிதையின் மூழம் கொட்டி தீர்க்கிறேன்!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

ரத்தக் காட்டேரி எம்மக்களின்
குருதியை ருசி பார்க்க கிளம்பிட்டதே
குழந்தைகளின் அழுகுரல்
என் தூக்கத்தை பறித்து பல நாட்கள் ஆயின

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

அதோ ஒரு தலை ராவணண்
அதிகாரத்தின் உச்சியில் உட்கார்ந்துக்கொண்டு
என் சகோதரர்களை கொன்று குவிக்கிறான்
இந்த கொடுமையைக் கேட்க நாதியில்லாமல்
போய் விட்டது என் சமுகம்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

இட்லர் மறுபிறவி எடுத்து விட்டான்
என்று நீ கூறியபோது நான் நம்பவில்லை
இதோ அந்த கொடும்பாவியின்
இன அழிப்பு வேட்டை நன்றே நடக்கின்றது
தட்டிக்கேட்க என் முத்தமிழ் நாயகன் வருவான்
என்று எதிர்பார்த்த எனக்கு…..முகத்தில் கரி
மருத்துவமனையில் தஞ்சம் கொண்டானாம்
என் முத்தமிழ் நாயகன்

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

எம்மதமும் சம்மதம் என்ற
என் மக்களுக்கு போர்க்கொடி
தூக்கி புறப்பட்ட அமைதி புறாக்கள்
“கச்சாமி” மந்திரத்தை உச்சரித்த குள்ளநரிகள்
“நிர்வான” சுரபியை கூப்பிட்டேன்
அவன் தூக்குப் போட்டுக்கொண்டனாம்….செய்தி வந்தது!

ஐயோ! என் மனம் குமுறுதே!!!

கண்ணகி வேஷத்தில் மறைந்திருக்கும்
“பிஷா” கோபுரக் நாடகக்காரி
தன் வஞ்சத்தை தீர்க்க
இன்று என் மக்களின் இன அழிப்பு வேட்டைக்கு உடந்தை
இவள் ராஜ அசுரனின் வப்பாட்டியோ?
என் தமிழ் மக்களே
பொங்கி எழுங்கள்
இவர்கள் சந்ததியை ஒழித்திடுவோம்
அப்பொழுதாவது என் மக்களின்
ஆத்துமா சாந்தி அடையட்டும்
அரசியல் நரிகளுக்கும் புத்தி வரட்டும்

பிரான்சிஸ் சைமன், பினாங்கு,மலேசியா.

No comments: